இன்றைய தேதியில் நிர்மானிக்கப்படும் பெரும்பாலான வீடுகள் அனைத்தும் அடுக்குமாடி வீடுகளாகவே காணப்படுகின்றன. அடுக்குமாடி வீடுகளை நிர்மானிப்பதில் மக்கள் அதீத ஆர்வத்தை காட்டி வருகின்றனர். அடுக்குமாடி வீடுகளை நிர்மானிப்பதின் அவசியத்தை அறிந்த மக்கள் அதனுடன் தொடர்புபட்ட கட்டிட வடிவமைப்பு (Structural Design) மற்றும் கட்டமைப்பு பொறியியலாளர் (Structural Engineer) போன்றோரின் அவசியத்தை இன்னும் அறியாமல் இருக்கின்றனர்.
அடுக்குமாடிகளன்றி ஓர் சாதாரண வீடு வடிவமைப்பது , நிர்மானிப்பதில் கூட ஓர் தகுதிபெற்ற கட்டமைப்பு பொறியியலாளரின் பங்கு மிக முக்கியமானதாகவும் இன்றியமையாததாகவும் காணப்படுகிறது. துரதிஷ்டம் என்னவென்றால் நன்கு படித்த வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு கட்டமைப்பு பொறியியலாரர்களின் அவசியத்தை உணர்ந்துகொள்வதில்லை
எமது ஊர்களில் நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் அதிகமான கட்டிடங்கள் மிகையான வடிவமைப்பினை கொண்டவையாகவும் சில கட்டிடங்கள் தேவையை விடவும் குறைவான வடிவமைப்பினை கொண்டதாகவுமே காணப்படுகின்றன. இவற்றிற்கான காரணங்களை அறிந்துகொள்ள முற்பட்ட போது, “கட்டிடங்களை நிர்மானிப்பதிற்கான முழு பொறுப்பினையும் கட்டிட உரிமையாளர்கள் அனுபம்வாய்ந்த ஒப்பந்தக்காரர்களிடம் (Contractors) வெறுமனே அனுபவம் மட்டுமே கொண்ட கான்ட்ராக்டரிடமோ அல்லது மேசனிடமோ வழங்குகிறார்கள்” என்பதை அறிந்துகொண்டேன். இவ் அனுபவம்வாய்ந்த ஒப்பந்தக்காரர்கள் வெறுமனே அனுபவம் மட்டுமே கொண்ட காண்ட்ராக்ட் காரர்கள், தொழில்சார் (Professional) தகமையற்றவர்களாக வே காணபட்டுகின்றனர். மேலும் அவர்கள் கட்டிடட வடிவமைப்பு(design) மற்றும் மேற்பார்வை(site supervision) போன்ற விடயங்களை மேற்கொள்ள தொழில்சார் தகமைபெற்ற வல்லுனர்கள்களை நியமிப்பதுமில்லை.
இவ்வாறான தகுதியற்ற காண்ட்ராக்ட் காரர்கள் “Factor of safety” எனும் மிக முக்கியமான கணியம் ஒன்றை கருத்திற்கொள்வதில்லை. அவர்களது வடிவமைப்புக்கள் முற்றிலும் அறியாமையிலேயும் எடுகோள்களிலுமேயே தயாரிக்கப்படுகின்றன.
வீட்டு வரைபடம் (House Plan) ஒன்றானது சட்ட விதிமுறைகளிற்குற்பட்டது என அனுமதி பெற ஏராளமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் காணப்படுகின்றன. தொழில்சார் தகுதிபெற்ற கட்டமைப்பு பொறியியலாளர்களினால் வடிவமைக்கப்படாதவைகள் நடவடிக்கை எடுக்கதக்க குற்றமாக காணப்படுகின்ற போதிலும் அவற்றிற்கான அனுமதிகளை வழங்கும் அதிகாரிகள் இவற்றை குற்றமாக கருதாமல் கடந்து செல்கின்றனர்.
காணப்படுகின்ற போதிலும் அதே அமைப்புக்கள், ஒரு தகுதிவாய்ந்த கட்டிட பொறியியலாளரின் அனுமதி இல்லாமல் மேட்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை (வீடு போன்ற சிறிய அளவிலாலான கட்டுமானங்களுக்கு) ஒரு குற்றமாக கருதாமல் கடந்து செல்வது துரதிஷ்டமே
கட்டமைப்பு பொறியியலாற்றல்களின் ( Structural Engineering) தேவை ஒரு ஏன் ஒரு கட்டுமானத்திற்கு இன்றியமையாதது என்பதற்கான ஒரு சில காரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
தூண் மற்றும் பீம் ஆகியவற்றை சரியான அமைப்புகளில் தேவையுடைய இடங்களில் மாத்திரம் வைப்பதன் மூலமே வீடொன்றிற்கான சௌகரியமான கட்டமைப்பினை பெற முடயும். எனினும் இலங்கையில் காணப்படும் ஏராளமான ஒப்பந்தக்காரர்கள் காண்டாக்ட் காரர்கள் (contractors) தம்ப் ரூல் (Thumb rule) இன் மூலமே தூண்கள் மற்றும் பீம்களின் இடைவெளிகளை தீர்மானிக்கின்றனர். அதிகமானோர் 10 அடி இடைவெளியில் தூண்களை நிர்மானிப்பதையே எழுதப்படாத விதியாக கொண்டுள்ளனர். இவ்வாறான தவறான விதிகள் தேவையற்ற இடங்களில் தூண்கள் வர காரணமாகின்றன. தேவையற்ற இடங்களில் வரும் தூண்கள், செலவினை அதிகரிப்பது மாத்திரமன்றி அப்பகுதியினை பயன்படுத்துவதை அசௌகரியமானதாக மாற்றிவிடுகின்றன. (கீழுள்ள படங்களை பார்க்கவும்)
கட்டிமொன்றின் அடித்தளம் அல்லது அஸ்திவாரமானது (Foundation) பல காரணிகளில் தங்கியுள்ளது. எனினும் சாதாரண அமைப்பை கொண்ட கட்டிடமானது முக்கியமாக
√ மண்ணின் வகை (Type of Soil)
√ அஸ்திவாரத்தின் மீது செலுத்தப்படும் சுமை (Load)
ஆகிய காரணிகளில் தங்கியுள்ளது.
பணத்தினை சேமிக்கும் நோக்கில் கட்டமைப்பு பொறியியலாளர்கள் இல்லாமல் வடிவமைக்கம்பட்டதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கான சில உதாரணங்கள்;
கட்டிடங்களின் மேல் அடுக்குகளில் தூணிற்கு கம்பிகள் குறைவாக போடுவதில் நியாயம் இருக்கிறது. அதே நோக்கத்தில் பீம் இற்கும் கம்பிகளை குறைவாக போடுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு வழிமுறை. (பீம் மற்றும் சிலப் தாங்கப்போவது அவ்வவ் மாடிகளில் வரும் பாரங்களை மாத்திரமே ஆனால் தூண் தாங்கப்போவது அதற்கு மேலுளுள்ள அணைத்து மாடிகளையுமே ஆகவே இது முற்றிலும் தவறான ஒரு கான்செப்ட்) . இதனால் வெடிப்புக்கள் அல்லது உடைவுகள் ஏற்படுதல்
இன்று உரிய தகுதியற்றவர்களால் நிர்மானிக்கப்படும் அதிகளவான வீடுகள் தேவைக்கு அதிகமான மிகையான வடிவமைப்பினை கொண்டுள்ளதாகவே காணப்படுகிறது. முறையான வடிவமைப்பினை செய்யத்தவறுவதால் கட்டிடத்திட் பாதுகாப்பினை அதிகரிக்க ஸ்பேன் இனை குறைத்து தேவைக்கு அதிகமான தூண்கள், பீம்களை வைத்தல், கட்டிட உறுப்புக்களின் அளவுகளை தேவையை விட அதிகமாக வைத்தல், தேவைக்கு அதிகமான அளவு reinforcement கம்பி வழங்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் தேவைக்கு ஏற்ப வடிவமைக்காமல் தேவையைவிட குறைந்த வலிமை உடையதாக வடிவமைத்துவிடுகிறார்கள்.
உரிய முறையில் கட்டிட வடிவமைப்பு மேற்கொள்ளப்படுமிடத்து தேவையற்ற வீணான செலவுகளை இல்லாமலாக்க முடியும். இதனால் பல இலட்சங்களை கட்டிட நிர்மானத்தின் போதும் அதன் பின்பும் சேமித்துகொள்ள முடியும். இவ்வாறு வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படும்.
ஓர் கட்டமைப்பு பொறியியலாளரால் கட்டிடத்தினை பாதுகாப்பான , நீடித்திருக்ககூடிய மற்றும் சிக்கனமானதாக வடிவமைக்ககூடிய அதேவளை சிறந்த தரத்தினையுடை தன்மைகளையும் ஓர் ஆர்கிடெக்ட் உடன் இணைந்து கொடுக்க முடியும்.
இந்த கட்டுரை மூலம் கட்டமைப்பு பொறியியலாளரின் வகிபாகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்களுடைய புதிய கட்டிடத்தின் (அல்லது வீட்டின்) கட்டுமானத்திற்கு எங்களுடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
Copyright © 2020 ZIZTAN LABS